டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு
பெருந்தலைக்காட்டில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாகர்கோவில்,
அழகியபாண்டியபுரம் பகுதியில் உள்ள பெருந்தலைக்காட்டில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊரைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பெருந்தலைக்காட்டில் 250–க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மூடப்பட்ட ஒரு டாஸ்மாக் மதுக்கடையை எங்கள் ஊரின் அருகில் அமைத்தால், அன்றாடம் வேலை செய்து தினக்கூலி பெற்று வாழ்க்கை நடத்தி வரும் ஊர் மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் பாதிப்படையும்.
மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ தூண்டுதலாக அமையும். மதுக்கடை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் இந்துகளின் வழிபாட்டு தலமான தர்ம சாஸ்தா கோவில் இருக்கிறது. இந்த பகுதி வழியாகத்தான் உலக்கை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
தடை செய்ய வேண்டும்
இதுமட்டும் இன்றி இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் பாதிப்படைவார்கள். எனவே மக்களின் நலன் கருதி மதுக்கடை அமைக்க தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story