மணல் அள்ள அனுமதி கிடைக்காததால் மதுரை–ராமேசுவரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் தொய்வு
மதுரை–ராமேசுவரம் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் அள்ள அனுமதி கிடைக்காததால், சாலை அமைக்கும்
மானாமதுரை,
மதுரையில் இருந்து ராமேசுவரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2015–ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும், அதன்பிறகு ராமநாதபுரம் வரை தலா 10 மீட்டர் அகலம் கொண்ட சாலையும் அமைக்கப்படுகிறது. தற்போது ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் சாலைப்பணிகள் முழுமையடைந்து விட்டன. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மணல் அள்ள அனுமதி கிடைக்காததாலும், மணல் தட்டுப்பாட்டாலும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என காரணம் கூறப்படுகிறது.
அனுமதி கிடைப்பதில் தேக்க நிலைஇந்த நான்கு வழிச்சாலையில் மதுரையில் இருந்து பரமக்குடி வரை 9 மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. சாதாரண பாலங்களை விடுத்து நான்கு வழிச்சாலைக்கு பாலம் அமைப்பதற்கு கூடுதலாக மணல் தேவைப்படும். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் 2 பாலங்களும், மானாமதுரையில் 2 பாலங்களும் கட்டப்படுகின்றன. இவற்றிற்கு மணல் தேவை அதிகம் உள்ளது. ஆனால் மணல் குவாரி அமைப்பதில் அதிகாரிகள் மட்டத்தில் போதிய ஒத்துழைப்பு இல்லை என ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மற்ற பகுதிகளில் அதிகாரிகள் உடனுக்குடன குவாரி அமைக்க அனுமதி அளித்து வரும் வேளையில், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தேக்க நிலை நீடிக்கிறது. இதனால் திட்டமிட்ட காலத்திற்குள் பணிகள் முடிவடைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
காலதாமதம்மேலும் பல்வேறு பகுதியில் விளைநிலங்களில் சாலைப்பணிகள் நடைபெறுகின்றன. அங்கு புதிதாக சாலை அமைக்க தரையை கெட்டிப்படுத்த வேண்டியுள்ளது. சவடு மண், பாறை மண் ஆகியவற்றை கொண்டு தரையை கெட்டிப்படுத்திய பின், சாலைப்பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இதற்கு தேவையான சவடு மண், பாறை மண் அள்ள கனிமவளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனாலேயே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முடிவடைவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
கோரிக்கைதற்போது மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்போக்குவரத்திற்கு நடுவே பணிகள் மேற்கொள்வது பெரும் இடையூறாக உள்ளது. ஒருபுறம் போக்குவரத்தும், மறுபுறம் சாலைப்பணிகள் என்பதால் தொழிலாளர்கள் அச்சத்துடனே பணிபுரிகின்றனர். திடீர், திடீரென சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் வாகன ஓட்டிகளும் திணறுகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க போதிய மணல் எடுக்க அனுமதி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.