செல்போன் மூலம் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சென்னை போலீஸ்காரர் கைது


செல்போன் மூலம் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சென்னை போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

செல்போன் மூலம் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரது புகைப்படத்தை அவரது தந்தை தனது ‘வாட்ஸ்–அப் புரோபைலில்’ வைத்திருந்தார். அந்த படத்தை மர்ம நபர் ஒருவர் எடுத்து சில ஆபாச படங்களை இணைத்து அந்த படத்தின் கீழ் அந்த மாணவியின் புகைப்படத்தையும் வைத்து அதே எண்ணிற்கு அனுப்பி வைத்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சென்னை போலீஸ்காரர்

மாணவியின் தந்தைக்கு அனுப்பிய புகைப்படம், எந்த செல்போன் எண் மூலம் வந்தது என்பதை கண்டறிந்து அதன் மூலம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். மாணவியின் தந்தை புகார் கொடுத்த 2 நாட்களில் சம்பந்தப்பட்ட செல்போன் எண் குமரி மாவட்டத்தில் இருந்ததும், அதன் பிறகு சென்னை குமரன்நகர் போலீஸ் நிலையத்தில் இருந்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த செல்போன் எண் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனையடுத்து போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் சென்னை குமரன்நகர் போலீஸ் நிலையத்தில் உளவுப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரியும் செந்தில் (வயது 44) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரர் செந்தில் தான் மாணவியை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியது தெரியவந்தது.

கைது

பிடிபட்ட போலீஸ்காரர் செந்திலின் சொந்த ஊர் குமரி மாவட்டம் படந்தாலுமூடு மடிச்சல் பகுதி ஆகும். அவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தனர்.

இதேபோல் பல மாணவிகளுக்கு செந்தில் ஆபாச புகைப்படம், வீடியோ அனுப்பி உள்ளார். யாரும் புகார் அளிக்காததால் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. செந்திலிடம் இருந்து, முறையான ஆவணங்கள் இல்லாமல் வாங்கிய 12 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இவர் அடிக்கடி சிம்கார்டுகளை மாற்றி, மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து செந்திலை நேற்று களியக்காவிளை போலீசார் கைது செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி குழித்துறை சிறையில் அடைத்தனர்.


Next Story