மூதாட்டி கொலை வழக்கு: மகள், ஆட்டோ டிரைவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
சேலத்தில் மூதாட்டி கொலை வழக்கில் மகள், ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய மனைவி வேலுத்தாய் (வயது 59). இவருக்கு குழந்தை இல்லை. இதனால் அவருடைய சகோதரியான மணியம்மையை பேச்சிமுத்து 2–ம் திருமணம் செய்து கொண்டார். மணியம்மை மகள் விஜயலட்சுமி (27). இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து இருந்தார். 3–வதாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜீவானந்தம் (26) என்பவரை விஜயலட்சுமி திருமணம் செய்தார்.
இந்த திருமணத்திற்கு வேலுத்தாய் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி கார்த்திக்கை பிரிந்து சேலத்திற்கு வந்துவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம் கடந்த 9–ந் தேதி வேலுத்தாயை கொலை செய்துவிட்டு,விஜயலட்சுமியை கடத்தி சென்று விட்டார். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
மகள், ஆட்டோ டிரைவர் கைதுஇந்தநிலையில் நேற்று சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தபோது ஜீவானந்தம் மற்றும் விஜயலட்சுமியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜீவானந்தம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
நான் விஜயலட்சுமி 2–வதாக திருமணம் செய்த கென்னடிக்கு தெரியாமல், அவரை அழைத்து செல்ல சேலம் வந்தேன். அப்போது விஜயலட்சுமியை அழைத்து செல்வது குறித்து வேலுத்தாய் கென்னடியிடம் சொல்வதாக கூறினார்.
இதையடுத்து நான் அவரை கட்டிலில் தள்ளிப்போட்டு வாயில் பிளாஸ்திரி ஓட்டினேன். வேலுத்தாய் காலை விஜயலட்சுமி பிடிக்க நான் அவருடைய கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஜீவானந்தமும், விஜயலட்சுமியும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.