ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

விழுப்புரம்,

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் கிறிஸ்தவர்கள் அழைக்கின்றனர். மேலும் இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைபிடித்து வந்தனர். சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்து மரணமடைந்து 3–ம் நாள் அதிகாலை உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகிறது. அந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பு பிரார்த்தனை

அதன்படி விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள கிறிஸ்வ ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்வர்கள் கலந்து கொண்டு ஒருவக்கொருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதேபோல் காணை புனித அந்தோணியார் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையொட்டி அருள் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்வர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கூட்டுத்திருப்பலி மற்றும் இயேசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story