வறட்சி நிவாரண நிதி, நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ராஜீவ் சாவ்லா தகவல்


வறட்சி நிவாரண நிதி, நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ராஜீவ் சாவ்லா தகவல்
x
தினத்தந்தி 17 April 2017 3:00 AM IST (Updated: 16 April 2017 11:51 PM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு மாவட்டத்தில், வறட்சி நிவாரண நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று மாவட்ட பொறுப்பு செயல் அதிகாரி ராஜீவ் சாவ்லா தெரிவித்து உள்ளார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டத்தில், வறட்சி நிவாரண நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று மாவட்ட பொறுப்பு செயல் அதிகாரி ராஜீவ் சாவ்லா தெரிவித்து உள்ளார்.

ஆய்வு கூட்டம்

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாவட்ட பொறுப்பு செயல் அதிகாரி ராஜீவ் சாவ்லா தலைமையில் வறட்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சத்தியவதி, மாவட்ட முதன்மை செயலாளர் ராக பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு ராஜீவ் சாவ்லா நிருபர்களிடம் கூறியதாவது:–

சிக்கமகளூரு மாவட்டத்தில் சுமார் 183 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சுமார் 300 கிராமங்களில் வறட்சி நிலவி வருகிறது. எனவே குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

வங்கியில் நேரடியாக...

மாவட்ட நிர்வாகத்திடம் சுமார் 1.46 லட்சம் டன் தீவனங்கள் இருப்பு உள்ளது. இதை வைத்து அடுத்த 3 மாதங்களுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க முடியும். மத்திய அரசு வழங்கி உள்ள வறட்சி நிதியை மாநில அரசு இங்குள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து வருகிறது.

நிவாரண நிதி வழங்குவதில் எந்த முறைகேடும் நடந்து விடாக் கூடாது என்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story