கள்ளக்காதலை கைவிட மறுத்து கணவர் தாக்கியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கள்ளக்காதலை கைவிட மறுத்து கணவர் தாக்கியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே, கள்ளக்காதலை கைவிட மறுத்து கணவர் தாக்கியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போடி,

தேனி மாவட்டம் போடியை அடுத்த பெருமாள்கவுண்டன்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னமாயன் (வயது 32). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், உத்தமபாளையத்தை அடுத்த சின்ன ஓவுலாபுரம் பெருமாள்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகள் ரமாதேவிக்கும் (29) திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோன்ஷ் (7), வனிதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சின்னமாயனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுடைய பழக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த ரமாதேவி, கணவரை தட்டிக்கேட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிடும்படியும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு சின்னமாயன் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்றும் இந்த பிரச்சினை குறித்து கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சின்னமாயன், ரமாதேவியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போடி புறநகர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரமாதேவியின் தந்தை சின்னச்சாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னமாயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story