காரியாபட்டி அருகே குடிநீருக்காக 3 கி.மீ. தூரம் அலையும் கிராம மக்கள்
காரியாபட்டி அருகே குடிநீருக்காக 3 கி.மீ. தூரம் அலையும் கிராம மக்கள், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
காரியாபட்டி,
தொடர்ந்து பருவமழை பொய்த்துப்போனதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபடுவது வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது.
இந்த நிலையில் காரியாபட்டி அருகே உள்ள கிராமத்தினர் சுமார் 3 கி.மீ. தூரம் சென்று குடிநீர் பிடித்து வருகிறார்கள். இதுகுறித்த விவரம் வருமாறு;-
உடையசேர்வைக்காரன்பட்டி
காரியாபட்டியை அடுத்துள்ள நரிக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட உடையசேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு குண்டாற்றின் கரையோரத்தில் கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போதைய வறட்சியினால் குடிநீர் வழங்கிய கிணறு வறண்டு விட்டது.
இதனால் சுமார் 3 கி.மீ, தூரம் சென்று பக்கத்து கிராமத்தில் இருந்து தண்ணீர் பிடித்து வருகிறார்கள். சுமந்து வர இயலாததால் தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள். அவ்வளவு தூரம் சென்று குடிநீர் பிடிக்க இயலாத முதியவர்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. குடிநீர் பிரச்சினையை சமாளித்திட குண்டாற்றின் கரையில் ஆழ் குழாய் கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story