தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல் தந்தை–மகன் மீது வழக்கு

புதுச்சேரி,
புதுவை சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் அய்யப்பன். தனியார் நிறுவனம் ஒன்றில் கடன்பெற்று மோட்டார் சைக்கிள் வாங்கினாராம். கடந்த 5 மாதங்களாக கடனுக்கான தவணைத்தொகையை செலுத்தவில்லை. இதுகுறித்து கேட்பதற்காக அந்த நிதிநிறுவனத்தில் பணியாற்றி வரும் குயவர்பாளையம் வேல்முருகன் நகரை சேர்ந்த பத்மநாபன் (வயது 29) தனது நண்பர் அருள்மணி என்பவருடன் அய்யப்பனின் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த அய்யப்பனிடம் கடன்தொகை தொடர்பாக கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், அவரது தந்தை அங்கப்பன் ஆகியோர் சேர்ந்து பத்மநாபனை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தந்தை–மகன் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story