காஞ்சீபுரம் கோவில்களில் போலீஸ் டி.ஜி.பி. சாமி தரிசனம்


காஞ்சீபுரம் கோவில்களில் போலீஸ் டி.ஜி.பி. சாமி தரிசனம்
x
தினத்தந்தி 17 April 2017 3:23 AM IST (Updated: 17 April 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் கோவில்களில் போலீஸ் டி.ஜி.பி. சாமி தரிசனம்

காஞ்சீபுரம்,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தனது மனைவியுடன் சென்னையில் இருந்து கார் மூலம் காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் வந்த அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமிபதி, ஜெய்சங்கர், வெற்றிச்செல்வன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் காமாட்சி அம்மனை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து அவர் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று வரதராஜ பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். காஞ்சீபுரத்தில் மிகவும் பழமையான பல்லவர்காலத்திய கைலாசநாதர் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிற்பங்களை பார்த்து மகிழ்ந்தார். 

Next Story