தீபா பேரவையில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்


தீபா பேரவையில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்
x
தினத்தந்தி 17 April 2017 4:00 AM IST (Updated: 17 April 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

தீபா பேரவையில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்

சென்னை,

அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) கட்சியின் பொருளாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை கோவை வடக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகராட்சி முன்னாள் மேயருமான டி.மலரவன் நேரில் சந்தித்து, தீபா பேரவையில் இருந்து விலகி கட்சியில் இணைந்தார். இவருடன், கோவை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் கோ.ராஜேஷ்குமார், கோவை மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவர் கோ.ரவீந்திரன், டி.ராஜா, ஆதி ஆனந்தன், வீராசாமி, சக்ரவர்த்தி ஆகியோருடன் கட்சியில் இணைந்தனர்.

மேலும், தே.மு.தி.க.வின் ஆலந்தூர் பகுதி 157-வது வட்டச் செயலாளர் இ.ஏசுதாஸ் தலைமையில் கட்சியைச் சேர்ந்த சுமார் 50-க்கு மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் ஆர்.விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் எஸ்.செம்மலை, முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story