இருந்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்
இருந்திரப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 18 பேர் காயம் அடைந்தனர்
இலுப்பூர்,
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்்பட்டியில் மிகவும் பிரசித்திப்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடந்த பங்குனி திருவிழாவினையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த ஊர் பொதுமக்களும், விழாக்கமிட்டியினரும் முடிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி, பார்வையாளர்கள் அமரும் இடம், முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம், வாடிவாசலுக்கு வெளியே தேங்காய் நார்களை பரப்பி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து ஜல்லிக்கட்டிற்கான அனுமதியினை வழங்கினர்.
பரிசோதனை
பின்னர் நேற்று காலையில் பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோன்று பதிவு செய்யப்பட்டிருந்த மாடு பிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். அதனைத்தொடர்ந்து முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி கோவில் காளைகள் அங்கிருந்து மேளம், தாளம், தாரை, தப்பட்டை முழங்க வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டது. கோவில் காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.
461 காளைகள்
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி ஜல்லிக்கட்டிற்கான உறுதிமொழியினை படிக்க. அதனை மாடுபிடிவீரர்கள் அனைவரும் திரும்பவும் கூறி, உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், சேலம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 461 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்து வந்த பல காளைகளை 259 மாடுபிடிவீரர்கள் போட்டி போட்டிக்கொண்டு அடக்கினர். இதில் சில காளைகள் தன்னை பிடிக்கவந்த காளையர்களை கொம்பால் தூக்கி வீசி பந்தாடின. சில காளைகள் மாடுபிடிவீரர்களிடம் சிக்காமல் துள்ளிக்குதித்து ஓடின.
18 பேர் காயம்
நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர்(பொ) மதியழகன் மற்றும் இலுப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நல்லபெருமாள் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த4 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பரிசுகள்
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பிலும், விழா கமிட்டியினர் சார்பிலும் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பிலும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், செல்போன்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டினை மாவட்ட கலெக்டர் கணேஷ், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, இலுப்பூர் வட்டாட்சியர் தமிழ்மணி, கூட்டுறவு ஒன்றியங்களின் மாவட்ட தலைவர் சின்னத்தம்பி, இலுப்பூர் மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் உதயகுமார், ஊர்பட்டையதாரர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுரு தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டினையொட்டி இலுப்பூரில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை இருந்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், ஊர்பட்டையதாரர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story