புத்தாநத்தத்தில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை

மணப்பாறை,
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய 3 ஒன்றியப்பகுதிகளிலும் நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கின்றன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கடுமையான வறட்சியில் இருந்து மீளவும், விவசாயம் செழித்திடவும், நீர்நிலைகளில் நீர் பெருகவும், மழை பெய்ய வேண்டி புத்தாநத்தத்தில் உள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சுன்னத் ஜமாத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த தொழுகையையொட்டி, முன்னதாக ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து பைத் ஓதிக் கொண்டே ஈத்கா திடலுக்கு வந்தனர். அங்கு தொழுகைக்கான நோக்கம் மற்றும் சிறப்பு துஆ குறித்து அகமது ஹபீர் விளக்கி கூறினார். இதைத்தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத்தொழுகையை பெரியபள்ளிவாசல் இமாம் அகமது ரிபாயிகான் நடத்தினார். தொழுகை நிறைவு பெற்றதும் அப்துல் பாஜித், குத்பா ஓதினார். இதைத்தொடர்ந்து பாவமன்னிப்புகள் வேண்டி சிறப்பு வழிபாடும், மழை வேண்டி சிறப்பு துஆவும் நடைபெற்றது. ஆலிம் லியாகத் அலி இந்த சிறப்பு துஆவை ஓதினார். சிறப்பு தொழுகை மற்றும் துஆவில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

Next Story