மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x
தினத்தந்தி 17 April 2017 4:00 AM IST (Updated: 17 April 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கர்ணன், இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வீரமுத்து முன்னிலை வகித்தனர். விழாவில் 223 மாணவ, மாணவிகளுக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், தமிழரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

Next Story