கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
13-ந்தேதி கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடந்தது. 14-ந்தேதி தீர்த்தவாரி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் தெப்ப திருவிழா நடந்தது.
இதனை முன்னிட்டு காலை 10 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வருதல் நடந்தது.
இந்த வீதிஉலா, கோவில்பட்டி அடைக்கலம் காத் தான் மண்டபம் வரை வந்து தெப்பத்திற்கு திரும்பியது.
தெப்பத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் இரவில் நாதசுவர வாத்தியங்களுடன் 9 முறை தெப்பத்தில் உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் முதல் சுற்று மேளமும், அடுத்த 3 சுற்றுகள் வேதபாராயணமும், அடுத்த 3 சுற்றுகள் தேவாரமும், கடைசி 2 சுற்றுகள் மேளமும் ஆகும்.
கலந்து கொண்டவர்கள்
இந்த விழாவில் கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனிசெல்வம், நாடார் உறவின் முறை சங்க தலைவர் ராஜசேகர், துணை தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜேந்திர பிரசாத், பொருளாளர் செல்வராஜ், பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சின்னமாடசாமி, செயலாளர் மாணிக்கம், பொருளாளர் கணேசன், செண்பக வல்லி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ராஜன்,
தெப்பத்தில் நீர் நிரப்பும் குழு முருகன், தெய்வேந்திர பூபதி, ஜோதி பாசு, எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஜெயபாலன், காமராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி செயலாளர் செந்தில் கனிராஜா, பொருளாளர் வக்கீல் செல்வம், காங்கிரஸ் தங்க மாரியப்பன்,
காமராஜ் இன்டர்நேசனல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி செயலாளர் திலகராஜ் கண்ணப்பன், தொழில் அதிபர்கள் திலகரத்தினம், ஜோதி லிங்கம் செந்தில்குமார், கூடலிங்கம் சுதாகரன், மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் நீதிராஜன், வக்கீல் பால்ராஜ், மத்திய பகுதி வியாபாரிகள் நல சங்க செயலாளர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் பாராட்டு
கடும் கோடை வெயிலிலும், தெப்பத்தில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி தெப்ப திருவிழா நடத்திய நாடார் உறவின் முறை சங்கத்தினரை யும், தண்ணீர் நிரப்பும் குழுவினரையும் பக்தர்களும், பொதுமக்களும் பாராட்டினார்கள்.

Next Story