கவர்னகிரியில் உள்ள மணிமண்டபத்தில் வீரர் சுந்தரலிங்கத்துக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்கப்படும்
ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியிலுள்ள மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கத்துக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரவிகுமார் தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கத்தின் பிறந்தநாள் விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கி 133 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தரராஜ் முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் வரவேற்று பேசினார்.
முழு உருவ வெண்கல சிலை
விழாவில் கலெக்டர் பேசும் போது, வீரர் சுந்தரலிங்கம் முதல் தற்கொலை படை வீரராக செயல்பட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டவர் ஆவார். அவருடைய மணி மண்டபத்தில் முழுஉருவ வெண்கலசிலை அமைக்கவும், பீரங்கி மேடு உள்ள இடத்தில் பீடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, மாவட்ட மறுவாழ்வு திட்ட மேலாளர் கர்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் சுந்தரகிருஷ்ணன், முருகானந்தம், யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் யூனியன் ஆணையாளர் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். தாசில்தார் நம்பிராயர் நன்றி கூறினார்.
முன்னதாக மணிமண்டபத்தில் வீரர் சுந்தரலிங்கத்தின் உருவச்சிலைக்கு கலெக்டர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story