புரட்சிகர இளைஞர் கழகத்தின் சார்பில் ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம்

நெல்லை,
நெல்லை நகர புரட்சிகர இளைஞர் கழகத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாநில குழு அமைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story