கோர்ட்டில் அகற்றப்பட்ட அம்பேத்கர் படத்தை மீண்டும் வைக்கக்கோரி வக்கீல்கள் போராட்டம்
மயிலாடுதுறையில், கோர்ட்டில் அகற்றப்பட்ட அம்பேத்கர் படத்தை மீண்டும் வைக்கக்கோரி 2-வது நாளாக வக்கீல்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை கோர்ட்டில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் மயிலாடுதுறை வக்கீல்கள் சங்கம் சார்பில் அம்பேத்கர் படத்துடன் கூடிய கல்வெட்டு திறப்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி பெறாததால் விழாவில் முக்கிய பிரமுர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மயிலாடுதுறை வக்கீல்கள் சங்க தலைவர் வேலு.குபேந்திரன் தலைமையில் வக்கீல்கள் அம்பேத்கர் படத்துடன் கூடிய கல்வெட்டை திறந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து அனுமதி பெறாமல் புதிதாக வைக்கப்பட்ட கல்வெட்டையும், அம்பேத்கர் படத்தையும் அங்கிருந்து அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை சப்-கோர்ட்டு தலைமை எழுத்தர் மனோகரன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சங்க தலைவர் வேலு.குபேந்திரன் தலைமையில் வக்கீல்கள் அகற்றப்பட்ட அம்பேத்கர் படத்தை மீண்டும் வைக்கக்கோரி கோர்ட்டு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க தலைவர், செயலாளர் பாலாஜி, வக்கீல்கள் கல்யாணி மகேந்திரன், கோபிநாத், கனிவண்ணன், இளஞ்செழியன், அறிவொளி, பிரபு, சிவதாஸ், பிரீத்குமார், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குலோத்துங்கன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story