நாகர்கோவிலில் துணிகரம்: கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு
நாகர்கோவிலில், கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பறைக்கால்மடத்தில் ஒரு கற்பக விநாயகர் கோவில் உள்ளது. சிறிய அளவில் உள்ள அந்த கோவிலில் கல்லால் செய்யப்பட்ட விநாயகர் சிலை இருந்தது. கோவிலில் காலை, மாலை ஆகிய வேளைகளில் பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை விநாயகருக்கு பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூசாரி பூட்டி விட்டுச் சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கிருந்த விநாயகர் சிலையையும் காணவில்லை. இரவில் யாரோ மர்ம நபர்கள் விநாயகர் சிலையை திருடிச் சென்றது தெரியவந்தது. கோவிலில் விநாயகர் சிலை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர்.
போலீஸ் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகராஜா கோவில் அருகே உள்ள ஒரு கோவிலிலும் விநாயகர் சிலை திருட்டுப்போனது குறிப்பிடத்தக்கது.

Next Story