ரூ.1¼ கோடி மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் மும்பை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டு உத்தரவு
ரூ.1¼ கோடி மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
ரூ.1¼ கோடி மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரூ.1¼ கோடி மோசடிமும்பை பாந்திரா பாலிஹில் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ்(வயது73). இவர் கடந்த 2004–ம் ஆண்டு தனது வீட்டை நாராயண் என்பவருக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்துக்கு விற்பனை செய்தார். வீட்டிற்கான முழு பணத்தை கொடுத்த பிறகும் ஹரிஷ், நாராயணுக்கு வீட்டை எழுதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இது குறித்து நாராயண் விசாரித்தபோது ஹரிஷ் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு அடமானம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நாராயண் வீட்டிற்கு கொடுத்த பணத்தை கேட்டார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
5 ஆண்டு ஜெயில்இதனால் விரக்தி அடைந்த நாராயண் சம்பவம் குறித்து பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது முதியவர் ரூ.1¼ கோடி மோசடியில் ஈடுபட்டது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பண மோசடியில் ஈடுபட்ட முதியவர் ஹரிசுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.