இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 721 பணியிடங்கள்
இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயர்களுக்கு 721 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. (ளிழிநிசி) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அதிகாரி தரத்திலான பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. ஏ.இ.இ., கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஜியோ பிசிக்ஸ்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆபீசர், புரோகிராமிங் ஆபீசர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
மொத்தம் 721 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதிகபட்சமாக புரொடக்சன் (கெமிக்கல், மெக்கானிக்கல், பெட்ரோலியம்) பிரிவில் 187 பணியிடங்களும், ஏ.இ.இ. (மெக்கானிக்கல்)– 74 இடங்களும், ஏ.இ.இ. (எலக்ட்ரிக்கல்) – 82 பணியிடங்களும், ஏ.இ.இ. டிரிலிங் – 56 இடங்களும் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 1–1–2017–ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
மெக்கானிக்கல், பெட்ரோலியம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஜியோபிசிக்ஸ்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், ஐ.டி. உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்விப் பிரிவை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
கேட்–2017 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 27–4–2017–ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். 7–5–2017–ந் தேதி முதல் 14–5–2017–ந் தேதிக்குள் குறிப்பிட்ட சான்றுகளை அப்லோடு செய்ய வேண்டியிருக்கும். 23–5–2017–ந் தேதி நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ongcindia.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Next Story