ஏத்தாப்பூரில், குடிநீர் வசதி கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


ஏத்தாப்பூரில், குடிநீர் வசதி கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 7:18 PM IST)
t-max-icont-min-icon

ஏத்தாப்பூரில் குடிநீர் வசதி கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

பெத்தநாயக்கன்பாளையம்

ஏத்தாப்பூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. வாரம் ஒரு முறை மட்டுமே பொதுக்குழாய்களில் குடிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் வசதி கேட்டு நேற்று ஏத்தாப்பூர் பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். மேலும் தட்டுப்பாட்டை போக்க தற்காலிகமாக டிராக்டர் அல்லது லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலைந்து சென்றனர்

இதையடுத்து இன்னும் ஒருவாரத்தில் குடிநீர் தட்டுப்பாடி இன்றி கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று பேரூராட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story