குருவரெட்டியூரில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து குருவரெட்டியூரில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்மாபேட்டை
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து சங்கங்களின் சார்பில் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் தன்ராஜ் தலைமை தாங்கினார். தற்சார்பு விவசாய சங்க தலைவர் பொன்னையன், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாய கூட்டமைப்பு செயலாளர் வடிவேல் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
அதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் நடந்தது. இதில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, பிரகலாதன், பிரகாஷ், ராமமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story