நீலகிரி பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
நீலகிரி பூண்டு கொள்முதல் விலை விழ்ச்சி அடைந்துள்ளதால் பூண்டு பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் தேயிலைக்கு அடுத்த படியாக ஏராளமான விவசாயிகள் மலைக் காய்கறிகளான முட்டை கோஸ், பீட்ருட், காரட், உருளைக்கிழங்கு, காலி பிளவர், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட காய்கறிகளை நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளைப்பூண்டுக்கு கணிசமான விலைக் கிடைத்து வந்ததால் தங்களது தோட்டங்களில் தனியாகவும், மற்ற காய்கறிகளுடன் சேர்ந்து ஊடு பயிராகவும் பூண்டு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
கொள்முதல் விலைஇதனால் நடப்பாண்டில் நீலகிரி பூண்டு வரத்து அதிகமாக உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் நீலகிரி பூண்டு கிலோவுக்கு கொள்முதல் விலை ரூ.180 ஆக இருந்தது. ஆனால் தற்போது கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.60– ஆக உள்ளது. இந்த விலை கட்டுப்படியாகவில்லை. இது தவிர கடந்த சில வாரங்களாக சைனா பூண்டு வரத்து அதிகமாக உள்ளது. அந்த பூண்டு கொள்முதல் கிலோவுக்கு ரூ.40–ம், சில்லறை விற்பனை விலை ரூ.60–க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் கவலைசைனா பூண்டு மட்டுமின்றி வெளிமாநில பூண்டுகளும் அதிகளவில் வரத்து உள்ளது. இதனால் மேலும் நீலகிரி பூண்டு வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது. இதனால் நீலகிரி பூண்டு சாகுடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த விலை விழ்ச்சி குறித்து கூக்கல்தொரை விவசாயிகள் கூறுகையில்,
பூண்டுக்கு ஓரளவுக்கு கணிசமான விலை கிடைத்ததால் ஏராளமாக விவசாயிகள் பூண்டு பயிரிட்டு வந்தனர். இந்த நிலையில் பூண்டு விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. நீலகிரி பூண்டுக்கு வரவேற்பு இருந்த போதிலும் தற்போது விலை விழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது என்று கூறினார்கள்.