பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் இடங்களில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது கலெக்டரிடம் பல்வேறு தரப்பினர் மனு
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்கக் கூடாது
விருதுநகர்,
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவினை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டாலும் அதற்கு பதிலாக மாற்று இடத்தில் கடையினை அமைத்திட அதிகாரிகள் இடம் தேடி வருகிறார்கள். சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு விட்டாலும் அதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படக்கூடாது என்று கூறி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது பல்வேறு தரப்பினர் கலெக்டர் சிவஞானத்திடம் இது தொடர்பாக மனு கொடுத்தார்கள்.
பா.ம.க.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் திலகபாமா, சிவகாசி நகராட்சி எல்லைக்குள் சட்ட விதிகளுக்கு முரணாக காந்தி ரோடு, முஸ்லிம் நடுத்தெரு, காமராஜர் நகர், பி.எஸ்.கே.ஆறுமுகம் சாலை ஆகிய இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மனு கொடுத்தார்.
சிவகாசி பெரியார் நகர், காமராஜர் நகர், விஸ்வநத்தம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற வகையிலும், வழிபாட்டு தலங்களின் அருகிலும் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவிடக்கோரி மனு கொடுத்தனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூரில் விளை நிலத்தில் டாஸ்மாக் கடையை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் அந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் கடைக்கு அருகில் பள்ளிக் கூடம் உள்ளதால் பள்ளிக் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது எனவும் முள்ளிச்செவல், துரைச்சாமிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Next Story