விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கரூரில் கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்,
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கரூர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கார்வேந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டித்தல். காவிரி பிரச்சினையில் தமிழக அரசை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தல். விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முகமூடி
விவசாயிகளை சந்தித்து பேசாத பிரதமர் மோடி, நடிகை ஒருவரிடம் பேசிக்கொண்டு இருப்பது போன்று 2 பேர் மோடி, நடிகை ஆகிய 2 பேரின் முகமூடியை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் முன்பு பேசிக்கொண்டு இருப்பது போன்றும், விவசாயி ஒருவர் மோடியிடம் கோரிக்கை குறித்து கெஞ்சுவது போன்றும் சித்தரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தமிழன், மாவட்ட செயலாளர் தினேஷ், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், சண்முகம், ஞானசேகரன், கருப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story