மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பாலத்தில் இரு வழி பாதையிலும் வாகனங்களை இயக்க கோரிக்கை


மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பாலத்தில் இரு வழி பாதையிலும் வாகனங்களை இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 April 2017 4:45 AM IST (Updated: 18 April 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பாலத்தில் விபத்துகளை தவிர்க்க இரு வழி பாதையிலும் வாகனங்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை, புதுச்சேரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சென்னை திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரை இரு வழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை பாலத்தில் இருந்து பல்லவன் சிலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழிப்பாதையில் மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகிறது. இன்னொரு பாதை மூடப்பட்டு வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

இரு வழி பாதை

இந்த ஒரு வழி பாதையில் மட்டும் வாகனங்கள் சென்று வருவதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த ஒரு வழி பாதையில் கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுவரை 26 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி இறந்து உள்ளனர்.

தற்போது கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் வாகனங்கள் வருகை அதிகரிக்கும் சூழல் உள்ளது. எனவே விபத்துகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு மூடப்பட்ட இன்னொரு பாதையை திறந்து, இரு வழி பாதையிலும் வாகனங்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொதுமக்களின் இந்த கோரிக்கை தொடர்பாக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கோதண்டபாணி, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனர் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.


Next Story