ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்
ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட மாநாடு பெரம்பலூரில் நடந்தது. வட்ட தலைவர் ராஜகுமாரன் தலைமை தாங்கினார். வட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். வட்ட செயலாளர் அகஸ்டின், மாநில துணை தலைவர் ரெங்கராஜன், வட்ட இணை செயலாளர் ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ராமகிருஷ்ணன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அழகர்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில செயலாளர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “உழைப்பதற்கு உடல்நலம் அவசியம்” என்ற தலைப்பில் பேசினார்.
மின்தடை நீக்கம் மையம்
இந்த மாநாட்டில் மின்பகிர்மானத்தில் தனியாருக்கு அதிகாரம் வழங்கவும், மின்நுகர்வோர்கள் வினியோகஸ்தர்களை தேர்வு செய்ய வாய்ப்பளிக்க மின்சார சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறது. இதனை மத்தியஅரசு கைவிட வேண்டும். தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதை தவிர்த்து தாமே அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணிநியமனம், பதவி உயர்வு, பணியிடமாற்றம் உள்ளிட்டவற்றினை அரசியல் குறுக்கீடு இல்லாமல் நடை முறைப்படுத்த வேண்டும். பெரம்பலூர் நகர் பிரிவில் மின்தடை நீக்கம் மையம் அமைக்க பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயங்கொண்டம் அனல் மின்திட்டம்
மேலும் ஜெயங்கொண்டம் அனல் மின்திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இணைமின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும். வார்தாபுயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மூன்று மடங்கு ஊதியத்தை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் மாநில தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல செயலாளர் ராமகிருஷ்ணன், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வட்ட செயலாளர் கணேசன் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணை தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

Next Story