கர்ப்பிணி மகளை கவுரவ கொலை செய்த பெற்றோர் கைது பரபரப்பு தகவல்கள்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் கணவரை விட்டு பிரிந்து காதலனை திருமணம் செய்த கர்ப்பிணி மகளை கவுரவ கொலைசெய்து விட்டு நாடகமாடிய பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி காலனிதெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பவானி. இந்த தம்பதியினரின் மூத்த மகள் சர்மிளா (25). இவர் 10-ம் வகுப்பு வரை படித்திருந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த கலைராஜ் (30) என்பவரும் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்தனர். இதனை சர்மிளாவின் பெற்றோர் அப்போது எதிர்த்தனர். எனினும் கலைராஜும், சர்மிளாவும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2008-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி, சர்மிளா வீட்டை விட்டு வெளியேறி அரியலூர் போலீஸ் நிலையத்தில் தனது காதலன் கலைராஜ் உடன் தஞ்சம் அடைந்தார். அப்போது இருவீட்டு பெற்றோரையும் போலீசார் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
வேறு ஒருவருடன் திருமணம்
ஆனால், அதன் பின்னர் கலைராஜ் தனது காதலி சர்மிளாவை அழைத்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டார். இதையறிந்த சர்மிளாவின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி, சர்மிளாவை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் கனிவாக பேசி, செந்துறை அருகே இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்த உறவினர் அன்புமணிக்கு (30) கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும் விருப்பம் இல்லாமல் அன்புமணியுடன் மனக்கசப்புடனேயே சர்மிளா வாழ்ந்து வந்தார். இதற்கிடையே அன்புமணிக்கும், சர்மிளாவுக்கும் ஹாசினி என்ற பெண் குழந்தை பிறந்தது.
காதலனுடன் புதிய வாழ்க்கை
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறி, அன்புமணியை விட்டு சர்மிளா பிரிந்து சென்றார். பின்னர் சென்னையில் தனது காதலன் கலைராஜை சந்தித்து நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கலைராஜுவும், சர்மிளாவை ஏற்றுக்கொண்டு அவருடன் குடும்பம் நடத்தினார். இதனால் சர்மிளா கர்ப்பமானார்.இதையடுத்து குடும்ப வாழ்க்கைக்கு ஆதாரமாக சர்மிளாவை கடந்த மாதம் (மார்ச்) 16-ந் தேதி சென்னை திருவேற்காட்டில் உள்ள ஒருகோவிலில் கலைராஜ் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சென்னையில் இருந்தே கர்ப்பகால சிகிச்சை முறைகளை சர்மிளா மேற்கொண்டு வந்தார்.
கர்ப்பத்தை கலைக்க...
இந்தநிலையில் தனது மகள் ஹாசினியை பார்க்க வேண்டும் என சர்மிளா விரும்பினார். இந்த விருப்பத்தை தனது காதல் கணவர் கலைராஜிடம் அவர் தெரிவித்தார். அதன்பின்னர் கடந்த 12-ந்தேதி கலைராஜ், சர்மிளா ஆகிய 2 பேரும் செந்துறைக்கு புறப்பட்டு வந்தனர். பின்னர் அங்கு தனியார் பள்ளியில் படித்து வரும் ஹாசினியை பார்க்க சர்மிளா சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சர்மிளாவின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று தனது மகளை பார்த்து பேசினர்.
அப்போது, நீ காதலனை திருமணம் செய்தது குடும்ப கவுரவத்திற்கு இழுக்காக உள்ளது. எனவே கலைராஜை விட்டு பிரிந்து, அன்புமணியுடன் சுமுகமாக வாழ்க்கை நடத்த வேண்டும். தற்போது தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று உனது கர்ப்பத்தை கலைத்து விடலாம் என சர்மிளாவிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
பெற்றோருடன் வாக்குவாதம்
அதனை தொடர்ந்து சர்மிளாவின் கர்ப்பத்தை கலைப்பதற்காக அவரது பெற்றோர் பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த கலைராஜ், சர்மிளாவின் பெற்றோரிடம் கடும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு தங்களது வீட்டுக்கே சர்மிளாவை அவரது பெற்றோர் அழைத்து சென்று விட்டனர். பிறகு செந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் சர்மிளா தங்க வைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டில் சர்மிளாவின் பெற்றோர் தங்கராசுவும், பவானியும் சேர்ந்து, கர்ப்பத்தை கலைக்குமாறு கூறி தனது சர்மிளாவிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தங்கராசுவும், பவானியும் சேர்ந்து சர்மிளாவை அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த சர்மிளா மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பரிதாபமாக இறந்தார்.
தற்கொலை என நாடகம்
மகளை கொலை செய்த சம்பவத்தில் போலீசில் மாட்டி விடாமல் தப்பிப்பதற்காக சர்மிளா தற்கொலை செய்தது போல் தோற்றத்தை ஏற்படுத்தி, நாடகமாட தங்கராசுவும், பவானியும் திட்டம் தீட்டினர். அதன்படி செந்துறையில் உறவினர் வீட்டில் இருந்த சர்மிளாவின் உடலை பொன்பரப்பி காலனிதெருவில் உள்ள தனது வீட்டுக்கு தங்கராசு கொண்டு வந்தார்.
பின்னர் மன உளைச்சலில் சர்மிளா தற்கொலை செய்து கொண்டதாக நேற்று காலை அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சர்மிளாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.
சர்மிளாவின் பெற்றோர் கைது
இதற்கிடையே சர்மிளா சாவு குறித்து தகவல் அறிந்த கலைராஜ், அங்கு விரைந்து வந்தார். சர்மிளா சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் செந்துறை போலீஸ் நிலையத்தில் கலைராஜ் புகார் கொடுத்தார். அதன் பேரில் தங்கராசு, பவானி ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது குடும்ப கவுரவத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் மகள் என்றும் கூட பாராமல் சர்மிளாவை அடித்துக்கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து தங்கராசு, பவானி ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். குடும்ப கவுரவத்திற்காக கர்ப்பணி மகளை பெற்றோர் அடித்துக் கொலை செய்த சம்பவம் செந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story