தஞ்சையில் வீடு புகுந்து டி.வி., லேப்-டாப் திருட்டு


தஞ்சையில் வீடு புகுந்து டி.வி., லேப்-டாப் திருட்டு
x
தினத்தந்தி 18 April 2017 3:45 AM IST (Updated: 18 April 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் வீடு புகுந்து டி.வி., லேப்-டாப் திருட்டு

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மாதவராவ் நகரை சேர்ந்தவர் ஸ்டெல்லா. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த டி.வி., லேப்-டாப், டி.வி.டி. பிளேயர் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். சென்னையில் இருந்து தஞ்சைக்கு திரும்பி வந்த ஸ்டெல்லா வீட்டில் பொருட்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். 

Next Story