தூத்துக்குடி அருகே பாஸ்பாரிக் அமிலத்தில் இருந்து யுரேனியத்தை பிரிப்பதற்கான கரைப்பான் உற்பத்தி ஆலை


தூத்துக்குடி அருகே பாஸ்பாரிக் அமிலத்தில் இருந்து யுரேனியத்தை பிரிப்பதற்கான கரைப்பான் உற்பத்தி ஆலை
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பாஸ்பாரிக் அமிலத்தில் இருந்து யுரேனியத்தை பிரிப்பதற்கான கரைப்பான் உற்பத்தி ஆலை

தூத்துக்குடி,

அமைப்பதற்கான கட்டுமான பணிகளை கனநீர் வாரிய தலைவர் ஏ.என்.வர்மா தொடங்கி வைத்தார்.

ரூ.38 கோடியில் கரைப்பான் உற்பத்தி ஆலை

இந்திய அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தூத்துக்குடி அருகே கனநீர் ஆலை அமைந்து உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் ரூ.38 கோடி செலவில் பாஸ்பாரிக் அமிலத்தில் இருந்து யுனியத்தை பிரிப்பதற்கான கரைப்பான்(சால்வெண்ட்) உற்பத்தி செய்யும் புதிய ஆலை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது.

விழாவுக்கு தூத்துக்குடி கனநீர் ஆலை பொதுமேலாளர் வி.பி.நேமா தலைமை தாங்கினார். கனநீர் வாரிய இயக்குனர் (தொழில்நுட்பம்) சே‌ஷசாய், உதவி இயக்குனர் (கரைப்பான்) எஸ்.கே.நாயக், பொதுமேலாளர் சகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய கனநீர் வாரிய தலைவர் ஏ.என்.வர்மா கலந்து கொண்டு புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கனநீர் ஆலை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

யுரேனியம்

பின்னர் இந்திய கனநீர் வாரிய தலைவர் ஏ.என்.வர்மா நிருபர்களிடம் கூறும் போது, இந்தியாவில் உள்ள அணு உலைகள் அனைத்தும் யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு செயல்படுகின்றன. இந்தியாவில் யுரேனியம் வளம் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. யுரேனியம் இறக்குமதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், யுரேனியத்தை பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையில் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பாஸ்பாரிக் அமிலத்தில் இருந்து யுரேனியத்தை கரைப்பான் மூலம் பிரித்தெடுக்கும் திட்டத்தை இந்திய அணுசக்தி துறை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பிரிக்கப்படும் யுரேனியத்தை அணுஉலைகளில் பயன்படுத்த முடியும். கனநீர் வாரியம் ஒடிசா மற்றும் குஜராத்தில் ஏற்கனவே 2 சிறிய அளவிலான கரைப்பான் உற்பத்தி ஆலைகளை அமைத்து உள்ளது.

தற்போது இந்தியாவிலேயே பெரிய அளவிலான கரைப்பான் உற்பத்தி ஆலை தூத்துக்குடி கனநீர் ஆலை வளாகத்தில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலை இதன் கட்டுமான பணிகள் 15 மாதங்களில் முடிவடையும். பாஸ்பாரிக் அமிலத்தில் இருந்து யுரேனியத்தை பிரித்தெடுக்கும் கரைப்பான் மட்டுமின்றி, இந்திய அணுசக்தி துறையில் பயன்படும், வேறு சில கரைப்பான்களும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் கரைப்பான்கள் இந்திய அணுசக்தி துறைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இது இந்திய அணுசக்தி துறையில் ஒரு மைல்கல் ஆகும். இது போன்று மேலும் சில கரைப்பான் தயாரிப்பு ஆலைகளை தூத்துக்குடியில் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம் அணுமின்உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் என்று கூறினார்.


Next Story