மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு 3 பேருக்கு வலைவீச்சு


மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 April 2017 2:26 AM IST (Updated: 18 April 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலப் பனையூர் லெனின் தெருவை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது26). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், தனது குடும்பத்தினருடன் திருத்துறைப்பூண்டியில் உள்ள கோவிலுக்கு சென்றார். கோவிலில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவருடைய 2 மோட்டார்சைக்கிள் களும் தீயில் கருகி கிடந்தன. இதுபற்றி அவர் அளித்த புகாரின்பேரில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த மதியழகன், ரமேஷ்கண்ணன், ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேர் வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிவபிரசாத்தின் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து மதியழகன், ரமேஷ்கண்ணன், ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story