கோவில்பட்டி அருகே முன்னால் சென்ற பஸ் மீது கார் மோதியது; 4 பேர் படுகாயம்


கோவில்பட்டி அருகே முன்னால் சென்ற பஸ் மீது கார் மோதியது; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 April 2017 1:30 AM IST (Updated: 18 April 2017 6:23 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பஸ்– கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே பஸ்– கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தனியார் நிறுவன ஊழியர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் சென்னவிளையைச் சேர்ந்தவர் வினோ (வயது 33). ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் சார்லஸ் (38), தரிசனம்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (31). இவர்கள் 3 பேரும் செல்போன் கோபுரங்களை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவில் மதுரையில் இருந்து ஒரு காரில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா தேவநல்லூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (24) ஓட்டிச் சென்றார்.

பஸ்சின் பின்புறம் மோதிய கார்

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கோவில்பட்டியை கடந்து தோணுகால் விலக்கு நாற்கர சாலையில் சென்றபோது, சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற அரசு விரைவு பஸ்சின் பின்புறம் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த கோபாலகிருஷ்ணன், வினோ, சார்லஸ், ராம்குமார் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கோவிலபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரையும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story