சிவகங்கையில் விவசாயிகள் சங்கத்தினர் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்


சிவகங்கையில்  விவசாயிகள் சங்கத்தினர் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:00 AM IST (Updated: 18 April 2017 6:33 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை

சிவகங்கை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை ஆகியவை சார்பில் மத்திய அரசு தமிழகத்தை பேரிடர் மாநிலமாக அறிவித்து கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் காத்திருப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேரன், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் சாத்தையா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட நிர்வாகிகள் கோபால், முத்துராமலிங்கம், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story