ரவுடி தற்கொலை சம்பவத்தில் மர்மம் கலெக்டர் அலுவலகத்தில், குடும்பத்தினர் மனு


ரவுடி தற்கொலை சம்பவத்தில் மர்மம் கலெக்டர் அலுவலகத்தில், குடும்பத்தினர் மனு
x
தினத்தந்தி 19 April 2017 3:00 AM IST (Updated: 18 April 2017 7:00 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை ரவுடி சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

நெல்லை,

நெல்லை ரவுடி சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கொம்பன் மகன் அய்யம்பெருமாள் (வயது 37). பிரபல ரவுடி. இவர் மீது 3 பேர் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் அய்யம்பெருமாளின் தந்தை கொம்பன் மற்றும் உறவினர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

கொலை செய்யப்பட்டார்


அய்யம்பெருமாள், சுத்தமல்லியை சேர்ந்த இசக்கிமுத்து மகள் பேச்சியம்மாளை காதலித்து கடந்த 2014–ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 13–ந்தேதி இரவு 11 மணிக்கு அய்யம்பெருமாளை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு உள்ளனர். மேலும் முன்வாசல் கதவை குடை கம்பியை கொண்டு வெளியில் இருந்தபடியே உள்பக்கமாக பூட்டி உள்ளனர்.

அதன் பிறகு பேச்சியம்மாள், அவளுடைய தந்தை இசக்கிமுத்து, தாய் சுசிலா, சகோதரர் துரை ஆகிய 4 பேரும் சேர்ந்து கொலை செய்து விட்டு மறைக்க முயற்சி செய்து உள்ளனர். எனவே இவர்கள் 4 பேர் மீதும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story