தர்மபுரியில், 2–வது நாளாக விவசாய தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது


தர்மபுரியில், 2–வது நாளாக  விவசாய தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 7:02 PM IST)
t-max-icont-min-icon

விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2–வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2–வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தமிழ்க்குமரன், மாசிலாமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் விவசாய தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஏற்கனவே தேசிய ஊரக வேலைஉறுதிதிட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story