ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:45 AM IST (Updated: 19 April 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்,

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மாயமலை, துணைத் தலைவர் நாராயணன் உள்பட ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாதாந்தோறும் முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒட்டுமொத்த ஓய்வூதியத்தை ஓய்வுபெறும் நாளில் வழங்க வேண்டும், தணிக்கையை காரணம்காட்டி பணப்பலன்கள் வழங்குவதை தாமதம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story