குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்டம் வாங்கல்குப்புச்சிப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த காமாட்சியம்மன் கோவில் தெரு, ஈ.வே.ரா.தெரு, வள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை கரூர்-மோகனூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்தும், படுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கரூர்-மோகனூர் சாலையில் 1¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story