வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி 2-வது நாளாக விவசாய தொழிலாளர்கள் போராட்டம்
திருத்துறைப்பூண்டியில் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி 2-வது நாளாக விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.உலகநாதன் தலைமை தாங்கினார். தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் வையாபுரி, முத்துப்பேட்டை ஒன்றியச்செயலாளர் முருகையன், மாதர் சங்க ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளருமான பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.வி.சந்திரராமன், மாதர் சங்க மாவட்டச்செயலாளர் எஸ்.தமயந்தி, கட்சியின் ஒன்றியச்செயலாளர் அ.பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியசெயலாளர் மூர்த்தி, கட்சியின் ஒன்றிய துணைச்செயலாளர் பாலு, மாதர் சங்க ஒன்றியச்செயலாளர் குருமணி மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
வறட்சி நிவாரணம்
போராட்டத்தில், வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்கும் விலையில்லா அரிசியை 30 கிலோ உயர்த்தி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலையினை அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Next Story