தாராபுரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி, புதுக்காவல் நிலைய வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சுப்பு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விவேகானந்தன், ச
தாராபுரம்,
தாராபுரத்தில் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி, புதுக்காவல் நிலைய வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சுப்பு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விவேகானந்தன், சுரேஷ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகே டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கோவில்கள் மற்றும் பள்ளிகளின் அருகே விதிமுறைகளுக்கு புறம்பாக டாஸ்மாக் மதுக்கடை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுக்கடைகளையும் உடனே மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.