மின்னணு நூலகம் தொடங்குவது குறித்து ஆலோசனை கலெக்டர் தலைமையில் நடந்தது
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மின்னணு நூலகம் தொடங்குவது குறித்து கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஆலோசனை நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சையில் உள்ள சரசுவதி மகால் நூலகம் மிகவும் புகழ்பெற்ற நூலகம் ஆகும். இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மாரத்திய மொழி ஓலைச்சுவடிகள், காகித சுவடிகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகளில் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், ஜோதிடம், கணிதம், வானியல் போன்றவை அடங்கிய ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, மொழி பண்டிதர்களால் துறை சார்ந்த அறிஞர்களால் நூலாக பதிக்கப்பட்டு வெளியிடும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் சரசுவதிமகால் நூலக வளர்ச்சி பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூலகத்தில் நடைபெற்று வரும் ஓலைச்சுவடிகள், காகித ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மின்னுருவாக்கம் செய்யும் பணி தொடர்பாகவும், மேலும் நூலகத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
மின்னணு நூலகம்
கூட்டத்தில் முதல் கூட்டமாக மூலிகை தாவரங்கள் வரைபடத்துடன் கூடிய புதிய நூல்களையும், அரிய வகை வரைபடங்கள் போன்றவற்றை அச்சிட்டு புதிய நூலாக வெளியிடவும், ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இதுவரை மின்னுருவாக்கம் மூலம் பதிவு செய்யப்பட்ட தகவல்களை படிப்பதற்கு வசதியாக மின்னணு நூலகம் தொடங்கிடவும், ஏனைய பணிகளை விரைந்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் நூலக நிர்வாக அலுவலர்், நூலகர், நூலக மொழி பண்டிதர் மற்றும் நூலக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story