மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா
மன்னார்குடி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,
நெடுஞ்சாலை அருகே உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் 3 ஆயிரத்து 400 மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே மன்னார்குடி அருகே கண்டிதம்பேட்டை கிராமத்தில் மூடப்பட்ட மதுக்கடைக்கு பதிலாக புதிய மதுக்கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை அறிந்த கண்டிதம்பேட்டை, வல்லான்குடிகாடு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று கண்டிதம்பேட்டையில் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் அருகே மதுக்கடை
கண்டிதம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவி.ஆனந்தன், கருணாநிதி, கூட்டுறவு சங்க தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மது ஒழிப்பு கமிட்டி நிர்வாகிகள் டாக்டர் மணவழகன், தாய்செந்தில், கரிகாலன், உத்திராபதி, கோபி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது கண்டிதம்பேட்டையில் நெடுஞ்சாலை பகுதியில் இருந்த மதுக்கடையை மூடிவிட்டு, கோவில் அருகே புதிய மதுக்கடை திறக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story