மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் பா.ஜனதா சார்பில் நடந்தது


மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் பா.ஜனதா சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர்,

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் அருகே மாவூர் பகுதியில் உள்ள மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பா.ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று பா.ஜனதா கட்சியினர் மாவூர் மதுக்கடை முன்பாக திரண்டனர். அப்போது மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து மாவூர் பாலம் அருகே பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா ஒன்றிய தலைவர் செந்தில்அரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரையரசு முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் அழகேந்திரன், நகர தலைவர் சங்கர், நிர்வாகிகள் அய்யன், தங்கபிரபு, ஜெயராமன், ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சமுதாயத்தை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கோட்டூர்-கண்கொடுத்தவனிதம்

இதேபோல கொரடாச்சேரி அருகே உள்ள கண்கொடுத்தவனிதம் கடைவீதியில் பா.ஜனதா கட்சி சார்பில் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், பாலகிருஷ்ணன், ஒன்றிய பொதுச்செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டூர் அருகே மேலப்பனையூரில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டூர் ஒன்றிய பா.ஜனதா செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டு மதுக்கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பினர். 

Next Story