ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா பொன்னேரி கரிகிருஷ்ணபெருமாள் கோவிலிலும் நடந்தது


ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா பொன்னேரி கரிகிருஷ்ணபெருமாள் கோவிலிலும் நடந்தது
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. அதே போன்று பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலிலும் நடந்தது.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதன் முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளான காந்திரோடு, சின்ன கடைத்தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் சப்–கலெக்டர் அருண் தம்புராஜ், கோவில் நிர்வாக அதிகாரிகள் வேதமூர்த்தி, வடிவேல்துரை, வேலரசு, குமரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி

பொன்னேரி திருவாயர்பாடி கிராமத்தில் உள்ள சவுந்தரவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ணபெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக விழா நடந்து வந்த நிலையில் நேற்று தேர் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து மாடவீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story