சட்டவிரோதமாக மீன் பிடித்தவர்களால் காவலாளி கத்தியால் குத்திக்கொலை 2 வாலிபர்கள் கைது


சட்டவிரோதமாக மீன் பிடித்தவர்களால் காவலாளி கத்தியால் குத்திக்கொலை 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 19 April 2017 4:00 AM IST (Updated: 19 April 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பவாய் ஏரியில் சட்டவிரோதமாக மீன் பிடித்தவர்களால் காவலாளி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.

மும்பை,

மும்பை பவாய் ஏரியில் சட்டவிரோதமாக மீன் பிடிப்பதை தடுக்க தனியார் பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சோயிப்கான் (வயது 50), தர்மேந்திரா (25), ஜாஹீர் (30) மற்றும் குலாப்சேக் (23) ஆகியோர் ஏரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரவு 11 மணியளவில் 2 பேர் மீன்பிடிக்க படகில் ஏரிக்குள் சென்றனர். இதை கவனித்த காவலர் சோயிப்கான் வேறு படகில் அவர்களை நோக்கி சென்றார். அவர் சட்டவிரோதமாக மீன் பிடித்தவர்களை உடனடியாக அங்கு இருந்து வெளியேறுமாறு கூறினார். மேலும் அவர்கள் வைத்திருந்த வலையை கிழித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீன் பிடிக்க வந்த 2 பேரும் சேர்ந்து காவலாளியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை கத்தியால் குத்தி ஏரிக்குள் தள்ளிவிட்டனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் கரைக்கு வந்த அவர்கள் பிற காவலாளிகளையும் தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஏரியில் விழுந்த சோயிப்கானை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று காவலாளி சோயிப்கானை போலீசார் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவலாளியை கொலை செய்ததாக தப்ராஸ்கான் (25), சலீம்சித்திக் (23) என்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.



Next Story