இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு


இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவள்ளூர்,

திருவண்ணாமலை மாவட்டம் நடுத்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). இவர் திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பத்தில் உள்ள கோழிக்கறிக்கடையில் தங்கி 3 சக்கர சைக்கிளில் பேப்பர் பொறுக்கி பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து 3 சக்கர சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த முருகஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக 3 சக்கர சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

செங்கல்பட்டை அடுத்த பொன்விளைந்த களத்தூரை சேர்ந்தவர் டில்லி (55). பூ வியாபாரி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மலையடிவேண்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக டில்லியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த டில்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story