மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது
மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழக அரசு நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை மேற்கொண்டது. இதையொட்டி காஞ்சீபுரத்தில் பல்வேறு மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் பெரிய காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் ஒரு மதுக்கடை செயல்பட்டு வந்தது. காஞ்சீபுரம் நகரில் பெரும்பாலான மதுக்டைகள் மூடப்பட்டதால் இங்கு ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி செல்கின்றனர். இதனால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில செயலாளர் கே.டி.ராகவன் தலைமையில் பா.ஜ.க.வினர் அந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் சின்னகாஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மாநில செயலாளர் கே.டி.ராகவன் உள்பட 17 பேரை கைது செய்தனர்.
மேலும் காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி ஆட்டோ நகரில் கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி காஞ்சீபுரம் ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகி பூபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவல் கிடைத்ததும் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர தலைவர் ரகுராமன், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, கருணாகரன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி தலைவர் ஆர்யா சீனிவாசன், நிர்வாகிகள் சீமான்மணி, நகர செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக மதுக்கடையை மூடவேண்டும் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுக்கடை வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு மதுபாட்டில்களை பாடையில் வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மதுபாட்டில் பாடையை கடை முன்பு வைத்து அதனை தீவைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் பா.ஜ.க.வினர் 240 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
ஆரணி
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி கம்மாள தெரு மற்றும் ஆரணி-புதுவாயல் நெடுஞ்சாலையில் தேவாலயம் அருகே என்று மொத்தம் 2 இடங்களில் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. மேலும், எல்லாபுரம் ஒன்றியம் குமரப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே பெரியபாளையம்-புதுவாயல் நெடுஞ்சாலையில் ஒரு மதுக்கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று பா.ஜ.க ஆரணி நகர தலைவர் அமரலிங்கம் தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் ரவி, சோழவரம் ஒன்றிய தலைவர் குணபூஷணம் ஆகியோர் முன்னிலையில் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டார்.
ஆரணி பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலையில் இருந்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்ற அவர்கள் கம்மாள தெருவில் உள்ள மதுக்கடையை முற்றுகையிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து ஆரணியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். குமரப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள மதுக்கடையை மூடக்கோரி எல்லாபுரம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணித்தலைவர் மூர்த்தி, ஒன்றிய தலைவர் தயாளன், மாவட்ட துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமரப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே இருந்து கோஷம் எழுப்பியவாறு மதுக்கடை வரை அவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டியில் உள்ள மதுக்கடை முன்பு பா.ஜ.க. நிர்வாகி வேந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே போல எளாவூரை அடுத்த வீராசாமி நகரில் உள்ள மதுக்கடை முன்பு விஜய் ஆதித்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
மீஞ்சூரை அடுத்த காட்டூர் கிராமத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி ஒன்றிய தலைவர் பொன்பாஸ்கர், திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் இருசப்பன், ஒன்றிய செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில எஸ்.சி. அணி செயலாளர் கணேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

Next Story