திருவள்ளூர் அருகே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை
திருவள்ளூர் அருகே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர்
திருவள்ளூரை அடுத்த குத்தம்பாக்கம் பருவதராஜபுரம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் என்கிற குமார் (வயது 26). ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கியாஸ் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். வெங்கடேசனுக்கும், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 30–ந் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற வெங்கடேசன், பருவதராஜபுரம் வண்ணான்குட்டையில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோர புதரில் கிடந்தது.
கொலை செய்யப்பட்டது ஏன்?இதுபற்றி தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வெங்கடேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேசனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் வெங்கடேசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தனிப்படை அமைப்புஇந்த கொலை தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் போலீசார் 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமண வீட்டினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.