விசைப்படகு பாறையில் மோதி விபத்து நடுக்கடலில் தத்தளித்த 4 பேர் கடற்படையினரால் மீட்பு


விசைப்படகு பாறையில் மோதி விபத்து நடுக்கடலில் தத்தளித்த 4 பேர் கடற்படையினரால் மீட்பு
x
தினத்தந்தி 19 April 2017 3:26 AM IST (Updated: 19 April 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

விசைப்படகு பாறையில் மோதி நடுக்கடலில் தத்தளித்த 4 பேரை கடற்படையினர் மீட்டனர்.

மும்பை,

மும்பை ராஜ்பவன் அருகே உள்ள கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோனிக்கா என்ற விசைப்படகு சென்று கொண்டு இருந்தது. அதில் 4 சிப்பந்திகள் இருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட அலையின் சீற்றம் காரணமாக படகு அப்பகுதியில் இருந்த பாறை ஒன்றின் மேல் மோதியது. இதனால் படகில் ஓட்டை விழுந்து கடல் நீர் உள்ளே புகுந்தது. படகு எந்த நேரத்திலும் கடலிலும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து படகில் சிக்கிய சிப்பந்திகள் இதுகுறித்து மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மும்பை போலீசார் மீட்பு படகில் மாகிம் கடல்பகுதியில் இருந்து நடு கடலில் தத்தளித்தவரை மீட்க சென்றனர். ஆனால் படகு சிக்கிய பகுதியில் பாறைகள் அதிகமாக இருந்ததாலும், நீர்மட்டம் குறைவாக இருந்ததாலும் போலீசாரால் அங்கு செல்ல முடியவில்லை.

ஹெலிகாப்டரில் சென்று மீட்பு

எனவே போலீசார் இதுகுறித்து இந்த கடற்படைக்கு தகவல் கொடுத்தனர். உடனே துரிதமாக செயல்பட்ட கடற்படையினர் ஐ.என்.எஸ். சிக்ராவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கயிறு மூலம் இறங்கி படகில் தத்தளித்த 4 பேரையும் லாவகமாக மீட்டு ஹெலிகாப்டருக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு கடற்படை டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.


Next Story