அரசு இசைப்பள்ளியில் அடுத்த மாதம் முதல் மாணவர் சேர்க்கை கலெக்டர் தகவல்


அரசு இசைப்பள்ளியில் அடுத்த மாதம் முதல் மாணவர் சேர்க்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 April 2017 1:45 AM IST (Updated: 19 April 2017 7:15 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் (மே) முதல் நடக்கிறது என மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் (மே) முதல் நடக்கிறது என மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

அரசு இசைப்பள்ளி

நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி கடந்த 1997–ம் ஆண்டு தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை வழியாக தொடங்கப்பட்டது. இந்த பள்ளி அரசு அலுவலர் “ஆ“ குடியிருப்பு, கலை பண்பாட்டு வளாகம், பாளையங்கோட்டை என்ற முகவரியில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்று விக்கப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவ–மாணவிகள் பள்ளிகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மூன்றாண்டுகள் படிக்க வேண்டும். முதல் ஆண்டுக்கு ரூ.120 கல்வி கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

மாணவர் சேர்க்கை

இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் (மே) முதல் நடைபெறும். நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பஸ் வசதி, ரெயில் கட்டண சலுகை, தங்கும் விடுதி வசதி, மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400, இலவச சீருடை, இலவச சைக்கிள் மற்றும் இலவச காலணி ஆகியவைகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிமூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகள் மற்றும் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story